2016 தமிழக சட்டமன்ற தேர்தல் முஸ்லிம் அமைப்புகளின் நிலை என்ன?

தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் 20க்கு மேற்பட்டவைகள் உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலாவதாக தோன்றியது பின்னர் தேசிய லீக்,தமுமுக, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ இப்படி என பல அமைப்புகள் உருவாயின. இத்தனை அமைப்புகளும்  செயல்பாடுகளில் மட்டும் தான் மாறியிருக்கின்றனர்.சமுதாய பணிகளில் அவரவர் தங்களால் ஆன பணிகளை தொடர்ந்து சமுதாயத்திற்கு ஆற்றி வருகின்றனர். சமுதாய பிரச்சனைகளில் ஒன்றிணைந்து தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
.
பொதுவாக தேர்தல் நேரங்களில் சமுதாய அமைப்புகள் திமுக அதிமுக என இரு அணிகளிலும் கலந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருவது வழக்கம் . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ஏமாற்றம் தந்தது.
.
2016 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.இதில் வெற்றி பெறவும் அதற்கான வியூகங்கல் அமைக்கும் முறையை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகள் எத்தகைய நிலையை மேற்கொள்ள போகிறார்கள் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிலை என்ன என்பது ஒரு கேள்விக்குறி ஒன்றிணைந்து ஒரு அணியை  தேர்ந்தெடுத்து கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறார்களா? அல்லது தேர்தல் நேரத்தில் உருவாகும் அணிகளில் பிரிந்து கூட்டணி அமைக்க போகிறார்களா? என்பது பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட தொகுதிகளை பெற்று தொகுதிகளை பங்கீட்டு கொண்டு போட்டியிட்டால் நலமுடையது என கருதுகிறோம்.இப்போதே முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை கணக்கெடுத்து நமக்குள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறி ஓரணியாக உருவானால் நமக்கான பிரதிநித்துவத்தை அதிகம் பெற வாய்ப்பாக அமையும்.
.
தேர்தலில் போட்டியிடாத அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்பது என்னைப்போன்ற பல இளைஞர்களின் அவாவாக உள்ளது.
.
அமைதிப்பூங்காவான தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எல்லோரும் கூறிவருகின்றனர். மதக்கலவரங்களை தூண்டிவிடுவோரும் அத்தகைய கருத்துக்களை கூரிவருன்றனர். சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் அரவணைப்பையும் விரும்புகிற முஸ்லிம் சமுதாயம் தேர்தல் காலத்திலாவது ஒன்றிணைந்து நமக்கான பிரதிநித்துவத்தையும் நமக்கான உரிமைகளையும் பெற ஒன்றாய் களம் காண்போம் உயர்ந்து பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம்.
 
–: லால்பேட்டை ஏ.எஸ்.முஹம்மது இஸ்மாயில்,
Share on Google Plus

About super

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

கருத்துரையிடுக