
சென்னை விமான
நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய முஸ்லிம் வர்த்தக பிரமுகரை
ஆடையின்றி சோதனை : மதத்தை கூறி இழிவுப்படுத்தியதாக சுங்கத்துறையினர் மீது
குற்றச்சாட்டு.....!!
பேங்காக்கிலிருந்து சென்னை
விமான நிலையத்தில் வந்திறங்கிய சென்னை மண்ணடியை சேர்ந்த முஸ்லிம் வர்த்தக
பிரமுகரை ஆடையின்றி சோதனை செய்து மதத்தை கூறி இழிவுப்படுத்தி உள்ளார்கள்
சுங்கத்துறையினர்.
ஒரு மனிதன் தன்னுடைய உடலில் எதை எடுத்து வந்தாலும்
ஸ்கேன் மூலம் கண்டறியும் வசதி இருக்கும் நிலையில், முஸ்லிம் பிரமுகரை முழு
ஆடையையும் அவிழ்த்து விட்டு சோதனை செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக இதிலே
மதவெறி தான் உச்சத்தில் அமர்ந்துள்ளதே தவிர வேறு எதுவுமில்லை.
20 ஆயிரம் கோடி
வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து எந்நேரமும் பெண்களுடன் உல்லாசம்
கொழிக்கும் விஜய் மல்லையா சென்னை விமான நிலையம் வந்தால் அவரது ஆடையை
அவிழ்த்து சோதனையிட சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ?
கொலை வழக்கில்
கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்
சென்னை விமான நிலையம் வந்தால் அவரது ஆடையை அவிழ்த்து சோதனையிட
சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ?
இமயமலைக்கு
சென்று விட்டு ரஜினி காந்த் சென்னை விமான நிலையத்திற்கு வரும் போது அவரது
முழு ஆடையையும் அவிழ்த்து பார்க்க சுங்கத்துறையினருக்கு திராணி இருக்கிறதா ?
ஆனால்
முஸ்லிம்களை மட்டும் பல விதமான சோதனை நடத்தியும், ஆடையின்றி சோதனை
நடத்தியும் இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் சோதனை என்ற பெயரில் மன
உளைச்சலுக்கு ஆளாக்கி மதவெறியை கொட்டும் சுங்கத்துறையினர் மீது அதிகாரிகள்
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமுதாயத்தின் உணர்வுகளோடும், மான மரியாதையோடும் விளையாடுவது சரியல்ல....
0 comments:
கருத்துரையிடுக